பேரூராட்சி செயல் அலுவலர்களின் வசூல் வேட்டை – லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுகொள்ளுமா..!
தமிழகத்தில் உள்ள 17 பேரூராட்சி மண்டலங்களில் நாகர்கோவில் மண்டலம் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது. இங்கிருக்கும் உதவி இயக்குநர் விஜயலட்சுமி ஊழலுக்கு பச்சைக்கொடி கட்டுவதால் செயல் அலுவலர்கள் சிலருக்கு யாரைப் பற்றியும் கவலை கிடையாது பணம் சம்பாதிப்பதை மட்டுமே ஒற்றை குறிக்கோளாக செயல்படுகின்றனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு உதாரணமாக – கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பேரூராட்சிக்குள்பட்ட திட்டுவிளையைச் சோ்ந்தவா் சுந்தரம்(67). இவா் பாகப்பிரிவினைப்படி தனக்குச் சொந்தமான வீட்டை பெயா் மாற்றம் செய்வதற்காக பூதப்பாண்டி பேரூராட்சியில் கடந்த 3 ஆம் தேதி விண்ணப்பித்திருந்தாராம்.
இது தொடா்பாக அவா் பலமுறை அலுவலகம் சென்றும் விசாரித்தும் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இது குறித்து செயல் அலுவலா் பாலசுப்பிரமணியனை, சுந்தரம் சந்தித்து கேட்டபோது, ரூ.10 ஆயிரம் தந்தால் பெயா் மாற்றித் தருவதாக கூறியுள்ளாா்.
இதுகுறித்து சுந்தரம், குமரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாரின் அறிவுறுத்தல்படி செவ்வாய்க்கிழமை மாலை செயல் அலுவலா் பாலசுப்பிரமணியனிடம் ரூ. 10 ஆயிரத்தை சுந்தரம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையிலான போலீஸாா் செயல் அலுவலா் கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
இதுபோல் குமரி மாவட்டத்தில் திருவட்டார், மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி கல்லுக்கூட்டம், முழகுமூடு, சுசீந்திரம் ஆகிய பேரூராட்சி செயல் அலுவலர்கள் மனசாட்சியே இல்லாமல் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து தங்கள் நலனையும் தங்கள் குடும்ப நலனையும் பெருக்கிக் கொள்கிறார்கள். இந்த ஊழல் செய்யும் தீவிரவாதிகளை லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டமிட்டால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை மீட்கலாம்.
குமரி மாவட்டத்தில் மட்டுமில்லாமல் தூத்துக்குடி, தென்காசி, சேலம், கோயம்புத்தூர் மாவட்ட பேரூராட்சிகளிலும் செயல் அலுவலர்கள் வீட்டு வரி போடுவது,பெயர் மாற்றம் ,தெருவிளக்கு பராமரித்தல் , திடக்கழிவு மேலாண்மை போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளில் மனசாட்சியே இல்லாமல் கொள்ளையடித்து விட்டு இது போதாது என்று போலி வவுச்சர் பில் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதித்து சொந்த ஊர்களில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்.
இந்த ஊழல் செயல் அலுவலர்களை அந்தந்த மண்டல உதவி இயக்குநர்கள் தான் கண்டிக்க வேண்டும் ஆனால் அவர்களோ கொடுப்பதை வாங்கிக் கொண்டு செல்வதால் இந்த செயல் அலுவலர்களுக்கு யாரைப் பற்றியும் பயம் கிடையாது.நேர்மைக்கு நான் தான் எடுத்துக்காட்டு என மார்தட்டிக் கொள்ளும் பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா அவர்களும் இந்த ஊழல்வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது இதைப் பற்றி கண்டு கொள்வதும் கிடையாது.
இது மட்டுமல்லாமல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பதவி உயர்வுக்கோ பணி மாறுதலுக்கோ எந்த பணமும் வாங்குவது கிடையாது ஆனால் சில செயல் அலுவலர்கள் அமைச்சர் அலுவலகத்தின் பெயரைக் கூறி வசூல் செய்து இயக்குனர் அலுவலகத்திற்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் இயக்குனர் அலுவலகத்திற்கு கொடுக்கும் பணம் எங்கு செல்கிறது சரி இயக்குனர் அலுவலகத்தில் யார் தான் வாங்குகிறார் என எங்களுக்கு ஜோசியம் பார்க்கவும் தெரியாது இயக்குநர் அலுவலகத்தில் பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் கருப்பாடுகள் இதை ஒத்துக் கொள்ளப் போவதும் கிடையாது…
சரி நமக்கு எதுக்கு இதெல்லாம் ஊழலில் இருந்து இந்த உள்ளாட்சி துறையை மீட்க நினைக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு டயல் செய்யட்டும் எதுக்கும் நம்பரை போட்டு வைப்போம்.
044-22310989
வாட்சப்:9498180936
செய்திகள்
H.TharnesH – Special Correspondent
Leave your comments here...