பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது – விசிக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசியல்தமிழகம்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது – விசிக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது – விசிக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது என திருச்சி வி.சி.க மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று மாலை மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் வெள்ளி விழா, திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என மும்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. ஒன்றியங்களில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுய ஆட்சி அரசையும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்த கூடாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது.

இது தான் நம் இலக்கு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அங்கு தேர்தல் கிடையாது, அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டு சிறை. இது தான் பாஜக பாணி சர்வாதிகாரம்” எனக் கூறினார்.

விசிக சார்பில் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

1. பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு

2. பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு

3. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல்4. சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல்

5. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

6. வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல்

7. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும்

8. ஆளுநர் பதவியை ஒழித்தல்

9. மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்

10. அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு

11. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல்

12. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல்

13. வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave your comments here...