100-வது சுதந்திர தினம்… அது வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு – பிரதமர் மோடி..!

தமிழகம்

100-வது சுதந்திர தினம்… அது வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு – பிரதமர் மோடி..!

100-வது சுதந்திர தினம்… அது வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு – பிரதமர்  மோடி..!

நாடு தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது அது வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதைக் கருத்தில் கொண்டே அடுத்த 25 ஆண்டுகளை அமிர்த காலம் என நாம் குறிப்பிடுகிறோம்” என்று ‘துடிப்பான குஜராத்’ சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் ‘துடிப்பான குஜராத்’ தலைப்பிலான 10வது வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன. முன்னணி உலகளாவிய நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், ‘குஜராத்தில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சர்வதேச தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ‘துடிப்பான குஜராத்’ உச்சிமாநாடானது, எதிர்காலத்திற்கான நுழைவாயிலாக இருக்கும். பிரதமர் மோடியின் ஒரே நிலம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற எண்ணத்தை காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று கூறினார்.

இந்த இரண்டு நாள் மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நாடு தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது அது வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதைக் கருத்தில் கொண்டே அடுத்த 25 ஆண்டுகளை அமிர்த காலம் என நாம் குறிப்பிடுகிறோம்.

இந்த அமிர்த காலத்தில் நடைபெறும் முதல் துடிப்புமிகு குஜராத் சர்வதேச உச்சி மாநாடு இது. இந்த மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மிக முக்கிய பங்குதாரர்கள்.

சர்வதேச சூழல் இன்று எப்படி இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தும், இந்திய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்றால், இவ்வளவு வளர்ச்சி வேகத்தைக் காட்டுகிறது என்றால் அதற்குப் பின்னால், கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் நாம் செலுத்திய கவனம் மிக முக்கிய காரணம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தி உள்ளன.

இன்று இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அது 11-வது இடத்தில் இருந்தது. வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று பல்வேறு மிகப் பெரிய சர்வதேச அமைப்புகள் கணித்துள்ளன. வல்லுநர்கள் தங்கள் அவதானிப்புகளை மேற்கொள்ளட்டும். ஆனால், இது நிகழும். இது எனது வாக்குறுதி” என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

Leave your comments here...