98 அமைப்புகளுக்கு அழைப்பு: திமுக சார்பில் பேரணி: லெட்டர் பேடு இருக்கவேண பாஜகவின் ஏபி. முருகானந்தம் கிண்டல்…!
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், இச்சட்டத்துக்கு எதிராக, கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன..
தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்நிலையில், பேரணியில் பங்கேற்க கூட்டணி அல்லாத 98 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமீமுன் அன்சாரி, கதிரவன், அதியமான், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் சங்கங்கள் உள்ளிட்ட 98 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜகவின் தேசிய இளைஞர் அணி துணை தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் :
சென்னையில் நடைபெற உள்ள பேரணிக்காக 98 அமைப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்.
அந்த 98 அமைப்புகளுக்கு லெட்டர் பேடு இருக்கான்னு கேளுங்க 😀
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) December 21, 2019
சென்னையில் நடைபெற உள்ள பேரணிக்காக 98 அமைப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம். அந்த 98 அமைப்புகளுக்கு லெட்டர் பேடு இருக்கான்னு கேளுங்க என நக்கலாக பதிவு செய்து உள்ளார்.!
Leave your comments here...