7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன்: ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை: மதம் மாறினாரா நடிகர் ஜெய்…?

தமிழகம்

7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன்: ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை: மதம் மாறினாரா நடிகர் ஜெய்…?

7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன்: ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை: மதம் மாறினாரா நடிகர் ஜெய்…?

நடிகர் விஜயின் பகவதி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெய். அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். அதன் பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்த ஜெய்க்கு ஆரம்ப காலகட்டத்தில் பல படங்கள் கை கொடுத்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று சாலையின் தடுப்புச்சுவரில் மோதினார் நடிகர் ஜெய். அப்போது, அவருடன் நடிகர் பிரேம்ஜியும் உடனிருந்தார். ஜெய்மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜெய்க்கு ஆறு மாதம் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ததுடன், ரூபாய் 5,200 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்து இருந்தார்.  இதுப்போல் அதிக சத்தத்துடன் கார் ஓட்டிய நடிகர் ஜெய் மேலும் இதுபோல் செய்யாமல் இருக்க ஜெய்யை வைத்தே விழிப்புணர்வு செய்த போலீஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது.

நடிகர் ஜெய் நடிப்பில் சில வாரங்கள் முன்பு ரிலீஸ் ஆன கேப்மாரி படம் மோசமான விமர்சனங்கள் தான் சந்தித்தது. அடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நீண்டகாலமாகவே இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை எங்கும் அவர் சொன்னதில்லை.

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுப்பற்றி முதன்முறையாக கூறியிருக்கிறார். அதில், ‛‛ஏழாண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை. சாமியே கும்பிடாதவன், ஏதோ ஒரு சாமியையாவது கும்பிடறானே என வீட்டிலும் ஒன்றும் சொல்லவில்லை. மதம் மாறினாலும் இன்னும் பெயரை மாற்றவில்லை. அஜீஸ் ஜெய்யாக மாறலாம் என முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.

Leave your comments here...