@PhonePe செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் – அறிமுகம் செய்த மெட்ரோ நிர்வாகம்..!

தமிழகம்

@PhonePe செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் – அறிமுகம் செய்த மெட்ரோ நிர்வாகம்..!

@PhonePe  செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் – அறிமுகம் செய்த மெட்ரோ நிர்வாகம்..!

போன் பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.தொடர்ந்து, மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. மேலும் பயணிகளை ஈர்க்கும் வகையில் மெட்ரோ நிர்வாகம் பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், போன் பே செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்துள்ளது.ஒருமுறை முன்பதிவு செய்யும்போது அதிகபட்சம் 6 டிக்கெட் வரை எடுத்துக்கொள்ளலாம் என்றும் 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பேடிஎம், வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் ஏற்கெனவே பெற்று வந்த நிலையில் தற்போது போன் பே செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...