லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் – கையும் களவுமாக பிடித்த ராஜஸ்தான் ஊழல் தடுப்பு போலீசார்..!
ராஜஸ்தானில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஏலச்சீட்டு மோசடி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டு ரூ.15 லட்சத்தை வாங்கியபோது 2 அதிகாரிகளை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வந்தன. கடந்த 30-ம் தேதி 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Leave your comments here...