ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன…? விசாரணையில் பகீர் தகவல்..!

இந்தியா

ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன…? விசாரணையில் பகீர் தகவல்..!

ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன…? விசாரணையில் பகீர் தகவல்..!

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ரயில்வே அதிகாரிகளின் விசாரணையில் மனித தவறே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பாசஞ்சர் ரயிலின் டிரைவர் சிக்னலை கவனிக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா ரயில் நிலையம் நோக்கி செல்லும் பயணிகள் ரயில் நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு செல்லும் ராயகடா பாசஞ்சர் ரயில் 15 நிமிட இடைவெளியில் 6 மணிக்கு புறப்பட்டது. பலாசா பாசஞ்சர் ரயில் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி- அலமண்டா இடையே பீமாலி கிராமத்தில் சிக்னலுக்காக காத்திருந்து மெதுவாக புறப்பட்டது.

இந்நிலையில் பின்னால் வந்த ராயகடா ரயில் பலாசா ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராயகடா ரயிலில் இருந்த 3 பெட்டிகளும், பலாசா ரயிலில் 2 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தது. அதேநேரத்தில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்த தண்டவாளத்தில் விஜயநகரத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆயில் டேங்கர் ரயில் பெட்டிகளில் மோதியது.

இந்த விபத்தில் 19 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவில் 8 பேரின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. விபத்தில் ராயகடா ரயிலின் லோகோ பைலட் எம்.எஸ்.எஸ்.ராவ், பலாசா ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த ரயில்வே கார்டு மற்றும் பயணிகள் 11 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயத்துடன் மீட்கப்பட்ட 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் இரவும், பகலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றது.

அதன் விபரம்:- நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பாலசா பயணியர் ரயில் சென்றது. இந்த வழித்தடத்தில் வந்த ராயகடா பயணியர் ரயில், பழுதடைந்த இரண்டு தானியங்கி சிக்னல்களில் நிற்காமல், பாலசா பயணியர் ரயில் மீது மோதியது. இந்த விபத்துக்கு, ராயகடா பயணியர் ரயலின் டிரைவர், அவரது உதவியாளர் ஆகியோர் தான் காரணம். இருவருமே விபத்தில் இறந்து விட்டனர்.ரயில்வே விதிகளின்படி, பழுதடைந்த தானியங்கி சிக்னல்களில், ரயில் இரண்டு நிமிடங்கள் நின்று, பின், 10 கி.மீ., வேகத்தில் புறப்பட வேண்டும். இதை ராயகடா பயணியர் ரயில் பின்பற்றாததால் விபத்து ஏற்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...