ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தும் வசதி – வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்…!
சென்னை: வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து விட்டது. உலகில் அதிகம் பயன்படுத்தக் கூடிய சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் தனது பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பலரும் எதிர்பார்க்கும் இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பலரும் இரட்டை சிம் போன்களையே பயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த வசதி அவர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த புதிய வசதியின் பயன்கள், முன்னதாக ஒருவர் இரண்டு செல்போன் எண்கள் வைத்திருந்தால் தனி தனியாக இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய வசதியின் மூலம் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடியும். சில சாதனங்களில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருந்ததால் பயனர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். ஒரு சிலர் இரண்டு செல்போன்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது இந்த அப்டேட் மூலம் அவர்களின் சிக்கல் தீர்ந்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது ??
இந்த அம்சத்தை பயன்படுத்த 2 போன் நம்பர் அல்லது சிம் கார்டு வைத்திருக்க வேண்டும். அதோடு Dual Sim போன் வைத்திருக்க வேண்டும். இதை செய்வது மிகவும் எளிது.
முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப் சென்று செட்டிங்ஸ் ஓபன் செய்யவும்.
இப்போது உங்கள் பெயரின் பக்கத்தில் உள்ள small arrow-வை கிளிக் செய்யவும். “Add account” கொடுக்கவும்.
உங்களின் மற்றொரு WhatsApp account மொபைல் எண்ணை டைப் செய்யவும்.
இப்போது அந்த எண்ணிற்கு SMS மூலம் code அனுப்பபட்டிருக்கும். அதை டைப் செய்து Verify செய்யவும்.
Leave your comments here...