ஓஷியானா கப்பற்படை விமான தளத்தையும் நார்ஃபோக் கப்பற்படை தளத்தையும் பார்வையிட்டார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்..!
பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தமது அமெரிக்கப் பயணத்தின் போது ஓஷியானா கப்பற்படை விமான தளத்தையும் நார்ஃபோக் கப்பற்படை தளத்தையும் பார்வையிட்டார். இந்தப் பயணம் இந்தியா அமெரிக்கா இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பின் ஆழத்தையும் இரு நாடுகளின் கப்பற்படைகள் இடையே உள்ள நெருக்கமான உறவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சருடன் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் திரு.ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், மத்திய அரசின் உயரதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்றிருந்தனர்.
Visited the Naval Air Station Oceana, Norfolk in the USA and observed a static display, and also F/A-18E flight demonstration. pic.twitter.com/fP90FZSYCk
— Rajnath Singh (@rajnathsingh) December 18, 2019
இந்தப் பயணம் பற்றி கருத்துத் தெரிவித்த திரு.ராஜ்நாத் சிங், இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான பாதுகாப்பு உறவுகள் இருப்பதை இது பிரதிபலிப்பதாக கூறினார். மேலும் எதிர்காலத்தில் இந்த உறவுகள் மேலும் வலுப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் மற்றும் தூதுக் குழுவினரை வரவேற்பதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாகவும், இந்த வருகை இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave your comments here...