இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்.. முகேஷ் அம்பானி முதலிடம் – பட்டியலில் இடம்பிடித்த பெண்..!

இந்தியா

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்.. முகேஷ் அம்பானி முதலிடம் – பட்டியலில் இடம்பிடித்த பெண்..!

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்.. முகேஷ் அம்பானி  முதலிடம் –  பட்டியலில் இடம்பிடித்த பெண்..!

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2023-ஐ புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதில் 7.13 லட்சம் கோடியோடு முகேஷ் அம்பானி முதலிடத்திலும், 5.17 லட்சம் கோடியோடு கெளதம் அதானி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் தொழிலதிபராக உள்ளார் சாவித்ரி ஜிண்டால். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச அளவில் அவர் 11-வது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7.13 லட்சம் கோடி. இரண்டாம் இடத்தில் அதானி குழும தலைவர் கெளதம் அதானி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5.17 லட்சம் கோடி.

இந்திய அளவிலான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார் சாவித்ரி ஜிண்டால். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1.53 லட்சம் கோடி. சர்வதேச அளவில் 82-வது இடத்தில் அவர் உள்ளார். ஜிண்டால் குழுமம் இந்தியாவின் முக்கிய எஃகு உற்பத்தியாளர் களில் ஒன்றாக உள்ளது. அதோடு மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சிமென்ட் மற்றும் ஜவுளி போன்ற பல துறைகளிலும் தனது செயல்பாட்டை இந்தக் குழுமம் விரிவாக்கியுள்ளது.

தற்போது 73 வயதாகும் சாவித்ரி ஜிண்டால் அஸ்ஸாமில் பிறந்தவர். ஜிண்டால் நிறுவனத்தை நிறுவிய ஓம் பிரகாஷ் ஜிண்டாலை 1970-களில் சாவித்ரி மணந்துகொண்டார். ஓம் பிரகாஷ் ஜிண்டால் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின்னர் அந்தக் குழுமத்தின் தலைவரானார் சாவித்ரி ஜிண்டால். தொழில் ஈடுபாட்டைத் தாண்டி அரசியலிலும் முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார்.  ஏற்கெனவே சாவித்ரி ஜிண்டால், 2016-ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 16-வது இடத்தைப் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

  • முகேஷ் அம்பானி – ரூ.7.13 லட்சம் கோடி
  • அதானி – ரூ.5.17 லட்சம் கோடி
  • ஷபூர் பலோன்ஜி மிஸ்திரி – ரூ.2.60 லட்சம் கோடி
  • ஷிவ் நாடார் – ரூ.2.36 லட்சம் கோடி
  • அசிம் பிரேம்ஜி – ரூ.1.94 லட்சம் கோடி
  • சைரஸ் பூனாவாலா – ரூ.1.56 லட்சம் கோடி
  • சாவித்ரி ஜிண்டால் – ரூ.1.53 லட்சம் கோடி
  • திலீப் சங்வி – ரூ.1.52 லட்சம் கோடி
  • ராதாகிருஷ்ணன் தாமினி – ரூ.1.44 லட்சம் கோடி
  • லட்சுமி மிட்டல் – ரூ.1.41 லட்சம் கோடி

Leave your comments here...