பாஜக – அதிமுக கூட்டணி முறிவு: பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் – அண்ணாமலை

அரசியல்

பாஜக – அதிமுக கூட்டணி முறிவு: பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் – அண்ணாமலை

பாஜக – அதிமுக கூட்டணி முறிவு: பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் – அண்ணாமலை

அ.தி.மு.க.,கூட்டணி முறிவு குறித்து பா.ஜ., தேசிய தலைமை முடிவு செய்யும் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமயைிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க., விலகுவதாக இன்று நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக மூத்த நிர்வாகி கே.பி .முனுசாமி அறிவித்தார். இதையடுத்து கூட்டணி முறிவு உறுதியாகியுள்ளது.

இது குறித்து பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் கூறியது, அ.தி.மு.க., அறிக்கையை படித்தோம். கூட்டணி முறிந்தது குறித்து பா.ஜ.,தேசிய தலைமை முடிவு எடுக்கும்.நடைபயணம் மேற்கொண்டு வரும் நான் அரசியல் பேசுவதில்லை என்றார்.

Leave your comments here...