தமிழக அரசின் பாடப் புத்தகத்தில் `சனாதனம்’… மண்டை மேல கொண்டைய மறந்துட்டீங்க..- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன விளையாட்டு இது தானா…?
சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
சமீபத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுவோரின் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்து இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத், “உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது.” “சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது,” என்று தெரிவித்து இருக்கிறார்.
இதற்குப் பிரதமர் மோடி முதல் லோக்கல் பாஜக நிர்வாகிகள் வரை எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், ‘கொசுவத்திச்சுருள்’ படத்தைத் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதற்கு பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, `நீ விளையாடு நண்பா’ என்று அதை ஷேர் செய்திருந்தார்.ஆனால், அவரது துறையான பள்ளிக்கல்வியின் 12-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சனாதனத்தை, `அழிவில்லாத நிலையான அறம்’ என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதாவது இந்தப் பாடத்திட்டமானது 2022-ல் புதிய பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், “இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்,” என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
Leave your comments here...