ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவளிப்போம் – அமெரிக்கா உறுதி..!

இந்தியாஉலகம்

ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவளிப்போம் – அமெரிக்கா உறுதி..!

ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவளிப்போம் – அமெரிக்கா உறுதி..!

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச நிர்வாகம் என்பது பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், அவர்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் விதமாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்ட அதிபர் பைடன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் முயற்சிக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்தார். பல்வேறு அமைப்புகளையும் வலுப்படுத்திச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தைத் தலைவர்கள் வலியுறுத்தினர். அந்த அமைப்புகள் நாம் தற்போது எதிர்கொள்ளும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது

Leave your comments here...