புதுப்பள்ளித் தொகுதி இடைத்தேர்தல் – உம்மன் சாண்டி மகன் அபார வெற்றி..!
கேரள முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது தொகுதியான புதுப்பள்ளியில் இடைத்தேர்தல் நடந்தது. அதேபோல் பிற 5 மாநிலங்களைச் சேர்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றார். மறைந்த உம்மன்சாண்டியின் சட்டமன்ற தொகுதியான புதுப்பள்ளியில், இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றார். 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க்சி தாமஸை சாண்டி உம்மன் தோற்கடித்தார். சாண்டி உம்மன் 78,098 வாக்குகள், ஜெய்க்சி தாமஸ்-41,644, பாஜக வேட்பாளர் லிஜின் லால் 6,447 வாக்குகள் பெற்றனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவை அடுத்து புதுப்பள்ளி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது நினைவுகூரத்தக்கது.
புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் இறக்கும் வரை தொடர்ச்சியாக 53 ஆண்டுகள் உம்மன் சாண்டி எம்.எல்.ஏ ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave your comments here...