கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டி..!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனபால், தனது சகோதரர் கனகராஜ் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்துவந்து சிலரிடம் கொடுத்தார். கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் தான் சந்தித்தேன்.
தன்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில்தான் 5 பைகளை எடுத்துவந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் தெரிவித்தார். கோடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை கனகராஜ் பையில் எடுத்து வந்தார்.
இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனகராஜ் தெரிவித்த நிலையில்தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார் என்று தனபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அது விபத்து அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இதுகுறித்து தெரியவரும் எனவும் அவர் கூறினார்.
Leave your comments here...