லடாக்கில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்து – 9 வீரர்கள் உயிரிழப்பு

இந்தியா

லடாக்கில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்து – 9 வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்து – 9 வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்கள் முகாமுக்கு வாகனங்களில் திரும்புவதும் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடங்களுக்கு வாகனங்களில் செல்வது வழக்கம். ஆபத்தான மலைப்பாதைகளை கொண்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் மிகவும் சவாலன தட்பவெப்ப நிலையையும் பொருட்படுத்தாது தேசத்தை காக்கும் பணியில் ராணுவ வீரரக்ள் ஈடுபட்டுள்ளனர்.

லாடாக்கை பொறுத்தவரை சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனா அத்துமீறி நுழைய முயன்றது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி இருநாட்டுப் படைகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக்கில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நம் ராணுவ வீரர்கள் அதிக அளவில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

இந்த நிலையில், இன்று லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் டிரக்கில் சென்ற ராணுவ அதிகாரி மற்றும் 8 ஜவான்கள் என மொத்தம் 9 பேர் பலியாகினர். ஒரு வீரர் காயத்துடன் மீட்கப்பட்டார். லே- வில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கியாரி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் டிவிஷனல் தலைமையகம் கியாரியில் தான் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இன்று மாலை 4 முதல் 5 மணிக்கும் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்குள்ளான டிரக் சென்ற போது மேலும் 5 ராணுவ வாகனங்கள் வந்துள்ளன. அப்போதுதான் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் டிரக் பாய்ந்துள்ளது.

இந்த கோர விபத்து நடைபெற்றதும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும், 9 வீரர்கள் சடலமாகவே மீட்கப்படதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. தேசத்தை காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் ராணுவ வீரர்கள், பணியின் போது விபத்தில் சிக்கி பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...