இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல குடியுரிமை திருத்த சட்டம்: தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் செய்யது ஹாசன் ரிஸ்வி..!
குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் செய்யது ஹாசன் ரிஸ்வி:-
இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அதனால் அதை எதிர்த்து நாம் போராட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
“நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான நிலை ஏற்பட்டால் தேசிய சிறுபான்மை ஆணையம் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளும். போராட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் அமைதியான முறையில் கையாள வேண்டும்” என்று அவர் கூறினார்.
Leave your comments here...