மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை – குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய சொந்த கிராம மக்கள்.!

இந்தியா

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை – குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய சொந்த கிராம மக்கள்.!

மணிப்பூரில்  பெண்கள் பாலியல் வன்கொடுமை – குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய சொந்த கிராம மக்கள்.!

மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர்.மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், பழங்குடியின குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது.

இந்த வன்முறைக்கு மத்தியில் கடந்த மே 4-ஆம் தேதி ஒரு சமூகத்தைச் சோ்ந்த ஆண்கள் திரளாகக் கூடி, மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த இரு பெண்களை ஆடைகள் ஏதுமின்றி சாலையில் அடித்து இழுத்துச் செல்லும் விடியோ காட்சி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விடியோ நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூா் வன்முறை சம்பவங்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேல் தொடா்ந்து வரும் நிலையில், அது குறித்து பிரதமா் மோடி மௌனம் காத்ததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வந்தன.இந்த விடியோவை கண்ட மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த விடியோவால் மிகவும் கவலையடைந்ததாகவும் மற்றும் குற்றவாளிகளைப் பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஜனநாயக நாட்டில், இதுபோன்ற வன்கொடுமைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்

இந்த நிலையில், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஹுய்ரெம் மேய்தோ என்பவரை வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர்.வெள்ளிக்கிழமை மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஹுய்ரெம் மேய்தோ (32) வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர். ஹேராதாஸ் செயல் ஒட்டுமொத்த மைதேயி சமூக மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தினர்

Leave your comments here...