உத்தராகண்ட்: நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 15 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்..!!

இந்தியா

உத்தராகண்ட்: நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 15 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்..!!

உத்தராகண்ட்:  நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 15 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்..!!

உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் இருந்த மின்மாற்றி திடீரென வெடித்தது. நமாமி கங்கை திட்டம் நடைபெறும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் 24 பேர் இருந்ததாகவும், மின்மாற்றி வெடித்ததில், 15 பேர் இறந்தனர். மேலும் மின்மாற்றி வெடித்து மின்சாரம் தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.

தீக்காயமடைந்த பலரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பேரழிவு ஏற்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் சாமோலியில் இந்த பெரும் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்ராகண்ட் மாநிலம் சமோலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், மாநில அரசின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நிவாரணங்களையும் அளித்து வருவதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; “மிகவும் வருத்தம் அளிக்கிறது! உத்ராகண்ட் மாநிலம் சாமோலியில் நிகழ்ந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது

Leave your comments here...