உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசை பட்டியல் – சென்னை ஐ.ஐ.டி பின்னடைவு..!
இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடத்திற்குள் வந்து சாதனைப் படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 2016-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147-வது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் தற்போது ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்குமுன் இருந்ததில் இருந்து 23 வரிசை முன்னேறி 149 இடத்தை பிடித்துள்ளது.
அதேவேளையில் இந்திய அறிவியல் கழகம் 155-வது இடத்தில் இருந்து 225-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 174-ல் இருந்து 197-வது இடத்திற்கும், ஐ.ஐ.டி. கான்பூர் 278-வது இடத்திலும், ஐ.ஐ.டி. சென்னை 250-ல் இருந்து 285 இடத்திற்கும் பின்தங்கியுள்ளன.
இது குறித்து க்யூ.எஸ். அமைப்பு தலைவர் கூறுகையில் ”இந்த வருடம் உலகளவில் 2900 நிறுவனங்களை பட்டியலிட்டோம். இதில் 45 இந்திய பல்கலைக்கழங்கள் இடம்பிடித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 297 சதவீதம் அதிகம் ஆகும். இதற்காக நான் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
Leave your comments here...