எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது!
சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். அதன்படி, 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி வழங்கும் சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன
இதில், தமிழில் ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் உயரிய விருதான பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் கவிதை, சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 1980-இல் துவங்கி கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேல் இலக்கிய உலகில் எழுதிக்கொண்டிருப்பவர்.
1960 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 20 ஆவது வயதில் கவிதை எழுதத் துவங்கினார். 1990-களில் குழந்தை இலக்கியத்தில் தடம்பதித்து குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம், அலாவுதீனின் சாகசங்கள் உள்ளிட்ட குழந்தை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.மேலும் ஆங்கிலம், மலையாள மொழிகளில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தன் படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
Leave your comments here...