ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல – வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்..!

இந்தியா

ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல – வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்..!

ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல – வெளியுறவுத்துறை அமைச்சர்  கண்டனம்..!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்திய அரசாங்கத்தை பல விஷயங்களில் குறை கூறினார். இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல் காந்தி, மோடி இந்தியா எனும் காரை பின்னோக்கு கண்ணாடியை மட்டும் பார்த்தே இயக்குகிறார். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக விபத்து ஏற்பட போகிறது என தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி அரசின் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்,`ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் நாட்டை விமர்சிப்பதையும், நமது அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதையும் வாடிக்கையாக வைத்திருப்பவர். உலகமே நம்மை எப்படிப் பார்க்கிறது… தேர்தல் வந்தால் சில சமயம் ஒரு கட்சி ஜெயிக்கும், மற்றொரு சமயம் இன்னொரு கட்சி வெற்றிபெறும்.

நாட்டில் ஜனநாயகம் இல்லையென்றால், இது போன்ற ஆட்சி மாற்றம் வரக் கூடாது. அனைத்துத் தேர்தல் முடிவுகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 2024 தேர்தலிலும் அதைப் பார்க்க முடியும். ராகுல் காந்தி நாட்டுக்குள் என்ன செய்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், தேசிய அரசியலை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்வது தேசநலனுக்காகத்தான் என நான் நினைக்கவில்லை.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைசெய்யப்பட்டதைச் சித்திரிக்கும் வகையிலான அணிவகுப்பு வாகனக் காட்சிகள் வெளியாகியிருப்பது வருத்தத்துக்குரியது. காலிஸ்தான் ஆதரவாளர்களை கனடா சகித்துக்கொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது கனடாவுக்கும் இந்தியாவுடனான அதன் உறவுக்கும் நல்லதல்ல” எனத் தெரிவித்தார்.

Leave your comments here...