41 மாணவிக்கு பாலியல் தொல்லை – மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட்..!
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஆசிரியர் உள்பட 41 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஆசிரியர் உள்பட 41 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது உறுதியானதை அடுத்து மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சையது தாகிர் உசேன் கூறுகையில்;- மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளையும், கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகவும் புகார் அளித்ததால், என்னைப் பழிவாங்க, முறையான விசாரணை நடத்தாமல் இப்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு திட்டவட்டமாக மறுத்துள்ளார். கல்லூரி இயக்குநர் ரத்தினவேல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மயக்கவியல் துறையில் மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன் மீதான பாலியல் புகார் பற்றி விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் 41 மாணவிகள் பதில் அளித்து இருக்கிறார்கள் .
இந்த விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கை அடிப்படையில்தான் பேராசிரியர் சையது தாகீர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்று விளக்கம் அளித்திருக்கிறார். ஆபரேஷன் தியேட்டரில் கண்ட இடத்தில் கையை வைப்பார். கண்ட இடத்தில் தொட்டு பேசுவார். ஆபரேஷன் தியேட்டரில் கூட முகக் கவசத்தை கழட்டி விட்டு தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துவார். முகக்கவசத்தை கழட்டாமல் இருந்தால் அவரே கழற்றி விடுவார். உடல் நிறத்தை கேலி செய்து பேசுவார். சிகப்பாக இருக்கும் பெண்களிடம் உன் அம்மா அப்பா புண்ணியம் செய்தவர்கள். அதனால்தான் உன்னை சிகப்பாக பெற்றெடுத்திருக்கிறார்கள் என்று பேசுவார் என்று மாணவிகள் விசாகா கமிட்டியில் குமுறி இருக்கிறார்கள்.
மாணவிகள் மட்டுமல்லாது நோயாளிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் என்று புகார்கள் கூறப்பட்டிருக்கின்றன . மருத்துவ மாணவிகளிடம் தலைமுடியை பிடித்து இழுத்து பின்னால் இருந்து கூப்பிடுவார் . நீ அழகா இருக்கிறாய் தலைமுடி அழகாக இருக்கிறது . புருவத்தை அழகாக வரைந்து வைத்திருக்கிறாய் என்றெல்லாம் கூசும்படி பேசுவார் என்று கூறியிருக்கிறார்கள். இளம்பெண் ஒருவர் தனது நோயாளி உறவினரை இழந்து கதறிய போது அவரை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார் . ஒரு டாக்டர் இப்படி எல்லாம் செய்யக்கூடாது. ஆனால் அப்படியெல்லாம் அவர் அசிங்கமாக நடந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த பாலியல் புகார் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. இதில் 41 மாணவிகள் பங்கேற்று பதிலளித்தனர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என டீன் ரத்தினவேலு கூறியுள்ளார்.
Leave your comments here...