திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 750 லட்டுகளை கணக்கில் காட்டாமல் முறைகேடாக விற்பனை – தேவஸ்தான ஊழியரிடம் விசாரணை..!!

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கணக்கில் காட்டாமல் 750 லட்டுகளை விற்ற தேவஸ்தான ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தேவஸ்தான ஊழியர், ஒப்பந்த பணியாளர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் சார்பில் தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாகவும், கூடுதலாக பெற விரும்பினால் ஒரு லட்டு ஐம்பது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே இருக்கும் மையத்தில் பூந்தி தயாரித்து கன்வேயர் பெல்ட் மூலம் கோயிலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு லட்டு பிரசாதம் தயார் செய்து ஒரு டிரேவில் 50 லட்டுகள் வீதம் வைத்து விற்பனை கவுன்ட்டருக்கு கொண்டு வரப்படுகிறது. 15 டிரேவில் இருந்த 750 லட்டுகளை கணக்கில் காட்டாமல் முறைகேடாக விற்பனை செய்ததை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தேவஸ்தான ஊழியர்களுடன், ஒப்பந்த ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது.

அவர்களை பிடித்து விசாரிக்கின்றனர். பல மாதங்களாக நடக்கும் இந்த முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Leave your comments here...