டில்லி விமான நிலையத்தில், ரூ.21 கோடி மதிப்புள்ள ஹெராயினை சுங்கத்துறையினர் பறிமுதல்…!
டில்லி விமான நிலையத்தில், ரூ.21 கோடி மதிப்புள்ள ஹெராயினை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
டில்லி விமானநிலையத்தில் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டில்லியில் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நைரோபியில் இருந்து வந்த, ஒரு பயணியிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில், சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் பையில், ரூ. 21 கோடி மதிப்புள்ள சுமார் 3 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அந்த பயணியிடம் இருந்து, 21 கோடி மதிப்புள்ள ஹெராயினை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.இது குறித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சுங்கச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் இந்தியாவை சேர்ந்தவர் என விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...