பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – மொட்டையடித்து திருவோடு ஏந்தி போராடும் மக்கள்!

தமிழகம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – மொட்டையடித்து திருவோடு ஏந்தி போராடும் மக்கள்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – மொட்டையடித்து திருவோடு ஏந்தி போராடும்  மக்கள்!

பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 263 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கிராமத்திற்கு நேரில் வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்க கோரி கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து 263 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை கண்டித்து ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று மொட்டை அடித்து திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மொட்டை அடித்து, நாமமிட்டு ஒன்று கூடி சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக நடந்து வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஒன்று கூடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பின்னர் கடும் வெயிலில், சுட்டெரிக்கும் வெயிலில் மொட்டை அடித்து நபர் ஒருவர் சாலையில் படுத்து திருவோடு ஏந்தி புரண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் திருவோடு ஏந்தி
போராட்டம் நடத்தினர்.

Leave your comments here...