மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை – 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் – அண்ணாமலை..!

அரசியல்தமிழகம்

மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை – 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் – அண்ணாமலை..!

மகளிருக்கு  ரூ.1000 உரிமை தொகை – 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து  வழங்க வேண்டும் – அண்ணாமலை..!

மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. தகுதியுடைய மகளிருக்கே ரூ.1000 வழங்கப்படும் என மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.


இந்த பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு பிறகு, மகளிருக்க மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி, செப்டம்பர் மாதம் வழங்கப்படும் முதல் தவணையில் 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000 வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். தகுதியுடைய மகளிருக்கே ரூ.1000 வழங்கப்படும் என மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave your comments here...