உண்மைதன்மையை உறுதி செய்யாமல் பிரபலங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது – மத்திய அரசு புதிய உத்தரவு..!

இந்தியா

உண்மைதன்மையை உறுதி செய்யாமல் பிரபலங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது – மத்திய அரசு புதிய உத்தரவு..!

உண்மைதன்மையை  உறுதி செய்யாமல் பிரபலங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது –   மத்திய அரசு புதிய உத்தரவு..!

பிரபலங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பொருளையும் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் விளம்பரப்படுத்தக் கூடாது என மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், தொலைக்காட்சி ஆகியவற்றில் பிரபலங்கள் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர். இது வழக்கமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்களின் தரங்கள் சரியாக இருக்கிறதா என்றால் அது பல கேள்விகளை உள்ளடக்கி உள்ளது.

மேலும் அதுபோன்று தரத்தை சோதிக்காமல் வெறுமென விளம்பரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளும், மோசடிகளும் நடப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு புகாரும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து தற்போது புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,\”பொருட்களை விளம்பரம் செய்யும் நபர்கள் தெளிவான வார்த்தைகளில் அனைவருக்கும் புரியும்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அது பணம் கொடுத்து ஊக்குவிக்க கூடிய விளம்பரமா, அல்லது வெறுமென ஆதாரமற்றதா என்று தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக என்ன காரணத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது என்பது குறித்த அனைத்து முழு விவரங்களும் கட்டாயம் இடம் பெற்றிருக்க இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக நிச்சயம் இருக்கக் கூடாது என்றும், தனிப்பட்ட முறையில் அந்த குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்தி அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளாமல் பதிவுகள் எதையும் செய்யக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...