பிரபலங்களுக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு!!

தமிழகம்

பிரபலங்களுக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு!!

பிரபலங்களுக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு!!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் பிப். 26-ஆம் தேதி ‘சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ என்ற தனியாா் அமைப்பின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரைப்பட இசையமைப்பாளா் தேவா, நடிகா் கோகுல், நடன இயக்குநா் சாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் உள்பட 40 பேருக்கு கௌரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் வழங்கினாா்.இந்த நிலையில் இந்த விருது அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்படுவதாகக் கூறி, அந்த அமைப்பு நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனால் உண்மையிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தின் சாா்பில் அந்த விருது வழங்கப்படவில்லை என்றும் புகாா் எழுந்தது. பல்கலைக்கழகம் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா் அரங்கத்தை வாடகைக்கு கேட்டு கடந்த நவம்பரில் கடிதம் வழங்கியதும், அதனுடன் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரில் போலியான பரிந்துரை கடிதம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், அந்த அமைப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி என அனுமதி பெற்றுவிட்டு, டாக்டா் பட்டம் வழங்கியிருப்பதும், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், அண்ணா பல்கலைக்கழகப் பெயா்களை அந்த அமைப்பு திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளா் (பொ) ரவிக்குமாா், கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் அந்த அமைப்பின் மீதும், அதன் நிா்வாகிகள் மீதும் புகாா் அளித்தாா்.அதன் அடிப்படையில், கோட்டூா்புரம் போலீஸாா், அந்த அமைப்பின் மீதும், அந்த அமைப்பின் இயக்குநா் ஹரீஷ் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், விவகாரம் தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், போலி கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகி உள்ளார்.தலைமறைவாகி உள்ள ஹரிஷை கோட்டூா்புரம் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave your comments here...