காற்றாலை மின்சார உற்பத்தி – இந்தியாவில் தமிழகம் முதலிடம்..!

தமிழகம்

காற்றாலை மின்சார உற்பத்தி – இந்தியாவில் தமிழகம் முதலிடம்..!

காற்றாலை மின்சார உற்பத்தி – இந்தியாவில் தமிழகம் முதலிடம்..!

சென்னை- மத்திய மின் துறை வெளியிட்ட பட்டியலில், நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதலிடத்திலும்; சூரியசக்தி மின் உற்பத்தித் திறனில், நான்காவது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் காற்றாலைகளில் இருந்து மே முதல் செப்டம்பர் வரை, தினமும் சராசரியாக, 2,500 மெகா வாட்டும்; சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மழை இல்லாத நாட்களில், தினமும் பகலில், 3,000 மெகாவாட்டிற்கு மேலும் மின்சாரம் கிடைக்கிறது. மின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக மின் வாரியமும் முந்தைய காலங்களை போல இல்லாமல், தற்போது, காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுதும் பயன்படுத்தி வருகிறது.

மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை இந்தாண்டு ஜன., 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி திறன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகம், 9,964 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி திறனுடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, 9,918 மெகா வாட் திறனுடன், குஜராத் இரண்டாவது இடத்திலும்; 5,269 மெகா வாட் உற்பத்தி திறனுடன், கர்நாடகா மூன்றாவது இடத்திலும்; 5,012 மெகா வாட்டுடன் மஹாராஷ்டிரா நான்காவது இடத்திலும், ராஜஸ்தான், 4,681 மெகா வாட்டுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

சூரியசக்தி பெரிய நிறுவனங்கள் தங்கள் காலி நிலத்தில், ஒரு மெகா வாட்டிற்கு மேலான, சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கின்றன. வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களில் குறைந்த திறனில் மேற்கூரை மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் குறைந்த திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்துள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, தமிழகத்தில், 6,123 மெகா வாட் திறனில் நிலத்திலும், கட்டடங்களின் மேல், 373.73 மெகா வாட் திறனிலும், சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தித் திறனில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. பட்டியலில், 16 ஆயிரத்து, 353 மெகா வாட் திறனுடன் ராஜஸ்தான் முதலிடத்திலும்; 8,747 மெகா வாட்டுடன் குஜராத், இரண்டாவது இடத்திலும்; 8,018 மெகா வாட் திறனுடன், கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Leave your comments here...