தி.நகரில் ஆகாய நடை மேம்பாலம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்.!
சென்னை தியாகராயர் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடை மேம்பாலதின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதி தியாகராயர் நகர் தினம்தோறும் கோடி கணக்கில் வர்த்தகம் நாடாகும் தியாகராயர் நகருக்கு பொருட்கள் வாங்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் பண்டிகை காலங்களில் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அங்கு ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ரங்கநாதன் தெருவில் இருந்து தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏதுவாக நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 2020ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கின. 15 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் கொரோனா ஊரடங்கு ஊழியர்கள் பற்றாக்குறை மேம்பாலத்திட்ட வடிவமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றம் உள்ளிட்டவற்றின் காரணமாக பணிகள் தாமதமடைந்தன. பாதியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Leave your comments here...