குடியரசு தின விழா- கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் தலைப்பாகை..!
டெல்லியில் இன்று நடந்த குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பல வண்ணங்களில் அவர் அணிந்த தலைப்பாகையின் பின்னணியில் உள்ள சூப்பரான விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தாண்டு குடியரசு தின விழாவில், பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். துண்டு ஒன்றையும் அணிந்திருந்தார். தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற மோடி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு குடியரசு தின கொண்டாட்டத்திலும் பங்கேற்றார். குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு கார் கதவை திறந்து கொண்டு நின்றபடி பார்வையாளர்களை நோக்கி இரு கைகளையும் அசைவத்தவாறே சென்றார். கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் பாரத் மாதே கி ஜே.. பிரதமர் மோடி.. மோடி.. என கோஷமிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அந்த இடத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக, சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அவர் அணியும் ஆடைகள் அதிக கவனம் பெறும். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று அணிந்திருந்த தலைப்பாகை அதிக கவனம் பெற்றது.
இன்றைய குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி கருப்பு வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தார். வெள்ளை நிற குர்தா, பேன்ட் அணிந்திருந்த பிரதமர் மோடி குர்தாவின் மீது கருப்பு நிற கோட் அணிந்திருந்தார். மாறாக அவரது தலைப்பாகை மட்டும் பல வண்ணங்களில் இருந்தது. இது பார்க்க பளிச்சென இருந்ததோடு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தான் பல வண்ணங்களில் பிரதமர் மோடி தலைப்பாகை அணிந்ததன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அவர் அணிந்திருந்த தலைப்பாகை ராஜஸ்தானி தலைப்பாகை வகையை சேர்ந்தது. நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ராஜஸ்தானி தலைப்பாகையில் பல வண்ணங்கள் இருக்கும் வகையில் இடம்பெற செய்து பிரதமர் மோடி அணிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்போது அதிகளவில் இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, பிரதமர் மோடியின் உடையில் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரின் தனித்துவமான தலைப்பாகை இருந்தது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் உடைகள் மிகவும் தனித்துவமாக அமைந்து இருக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளாக அவர் இதுபோன்று தனித்துவமான உடைகளையே தேர்வு செய்து அணிந்து அசத்துகிறார்.
Leave your comments here...