திருநங்கைகளுக்கு பசுமாடு வழங்கும் திட்டம்.!

தமிழகம்

திருநங்கைகளுக்கு பசுமாடு வழங்கும் திட்டம்.!

திருநங்கைகளுக்கு பசுமாடு வழங்கும் திட்டம்.!

விருதுநகர் மாவட்டத்தில், முதன்முறையாக காரியாபட்டியில் திருநங்கைககளுக்கு வாழ்வாதாரத்திற்காக பசுமாடு வழங்கும் திட்டம் இன்பம் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தது. திருநங்கைகள் வாழ்வாதாரத்திற் காக, பசுதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இன்பம் பவுண்டேசன் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், கணவனை இழந்த பெண்கள் , மாற்றுதிறனாளிகள் ஆகியோர்களுக்கு பசுமாடு வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள பசுதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக இதுவரை 12- நபர்களுக்கு தலா 50 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடுகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த, தை அமாவாசை அன்று காரியாபட்டியில் தாய் – தந்தை இல்லாமால் தனிமையில் வாழ்ந்துவரும் திருநங்கை பழனியம்மாளின் குடும்ப சூழ்நிலை கருதி பசுமாடு மற்றும் கன்றுகுட்டியுடன் வழங்கும் நிகழ்ச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு , தானம் செய்யப்படவுள்ள பசுமாட்டின் பால் கறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பிறகு, பசுதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்பம் பவுண்டேசன் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழரசி ஆகியோர் பசுதானம் செய்தனர்.

இது குறித்து விஜயகுமார் கூறும்போது : பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வர்களுக்காக இந்த பசுதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம் மாற்றுதிறனாளிகள், விதவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். எங்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களை நேரில் சென்று அவர்கள் மாடு வளர்க்க தகுதியானவர்களா இருக்கு வேண்டும் தானம் செய்யும் பசுமாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஏழை மக்களுக்கு பசுதானம் செய்கின்றோம். தோணுகால் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் கண்பார்வையற்ற 2 நபர்களுக்கு கடந்த ஆண்டு பசுதானம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

இந்த அருமையான திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துவரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக வறுமையில் வாழும் திருநங்கை ஒருவருக்கு வாழ்வாதாரம் உயர்வதற்காக பசுதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 40க்கு மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில், அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பயனாளி பழனியம்மாளுக்கு வஸ்திரதானம் செய்யப்பட்டது.

Leave your comments here...