காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது..!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17-ந் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ந் தேதி தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் (டிசம்பர் 16) நிறைவு பெற்றது . நிறைவு விழாவில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார் . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார் .
भारत की दो महान सांस्कृतिक धरोहरों के अद्भुत संगम #KashiTamilSangamam के समापन सत्र को संबोधित कर रहा हूँ।
இந்தியாவின் இரண்டு பெரும் கலாச்சார பாரம்பரியத்தின் சிறப்பு நிறைந்த சங்கமமான காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு கூட்டத்தில் உரையாற்றுகிறேன் https://t.co/kEt3HJKRJT
— Amit Shah (@AmitShah) December 16, 2022
இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
Leave your comments here...