பழனி “புனித நகராக” அறிவிக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க சுப்பிரமணியசாமி எம்பி அவர்களிடம் ராம.ரவிகுமார் கோரிக்கை..!

அரசியல்

பழனி “புனித நகராக” அறிவிக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க சுப்பிரமணியசாமி எம்பி அவர்களிடம் ராம.ரவிகுமார் கோரிக்கை..!

பழனி “புனித நகராக” அறிவிக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க சுப்பிரமணியசாமி எம்பி அவர்களிடம் ராம.ரவிகுமார் கோரிக்கை..!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி எம்பி அவர்களின் 80வயது- ஆயிரம் பிறை கண்ட விழா மதுரையில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட ராம.ரவிகுமார் சுப்பிரமணிய சுவாமியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்தார். அதில்  ஆறுபடைவீடுகளில் ஒன்றான புனிதமான பழனி நகரை மத்திய அரசு புனித நகரம் அந்தஸ்து  கொடுத்து, தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த கோரிக்கையில்

  • பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கிட தமிழக அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.
  • புனிதமான திருப்பதி மலை  சிறப்பு வசதிகளுடன் இருக்கக்கூடியது போல்,  பழனி ஆண்டவர் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் பழனி நகரை “புனித நகரமாக” அறிவிக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டுமென்றும்
  • பழனியில் புனித நதியான சண்முகநதியை  தூய்மைப்படுத்தி,
    கங்கை நதி படித்துறை போல,
    சண்முக நதி படித்துறை கட்டி பக்தர்கள் புனித நீராட கூடிய வகையில் வசதி செய்து தர தேவையான செயல்திட்டத்தை, தேவையான நிதியை “ஜல் சக்தி அபியான்” மூலமாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்திட வேண்டும்
  • பழனி மலை இடும்பன் மலை இணைப்பு” ரோப்கார் அல்லது இணைப்பு பாலம் உருவாக்கிட தமிழக அரசு திட்டமிட்டால்  அதற்கு  மத்திய சுற்றுலாத் துறைஅமைச்சகத்தின் மூலமாக தேவையான நிதி உதவி செய்திட வலியுறுத்த வேண்டும்.

மேலும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக பெருவிழாவிற்கு  தாங்கள் வருகை தரவேண்டும் என்ற  இந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

Leave your comments here...