விண்ணில் பாயும் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்!

இந்தியா

விண்ணில் பாயும் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்!

விண்ணில் பாயும் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்!

கடந்த 2020-ம் ஆண்டு, விண்வெளித்துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டது. இந்த பின்னணியில், இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட், இம்மாதம் 12-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்கு ‘விக்ரம்-எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘இஸ்ரோ’ ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. வணிக நோக்கத்தில், ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை செலுத்த திட்டமிட்டுள்ளது.

‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்டில் வாடிக்கையாளர்களின் 3 சுமைகள் ஏற்றி அனுப்பப்படுகின்றன. வானிலையை பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம், விண்வெளிக்கு ராக்கெட் ஏவிய முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெறுகிறது.

Leave your comments here...