இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியந்து பார்க்கிறது -சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் ..!

இந்தியா

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் உள்ள இடம் அது.

இது இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான சங்கமமாக இருக்கும் இடம். உலகளவில் நெருக்கடியின் காலம் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக விவரிக்கின்றனர். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த நமது அடிப்படைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன என்றார்.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன். பியூஷ்கோயல், பிரகலாத் ஜோஷி,ராஜூவ் சந்திரசேகர் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

Leave your comments here...