தீபாவளியை முன்னிட்டு ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை – முதல் இடத்தை பிடித்த மதுரை..!
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாகன விடுமுறை நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டு முறியடிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இதனை மிஞ்சும் அளவிற்கு தீபாவளி விற்பனையாக கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
அதன்படி, நேற்று சென்னை-ரூ. 51.52 கோடி, திருச்சி-ரூ.50.66 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, மதுரை ரூ.55.78 கோடி, கோவை- ரூ.48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனையானது. நேற்று முன்தினம், சென்னை-ரூ.38.64 கோடி, திருச்சி-ரூ.41.36 கோடி, சேலம்-ரூ.40.82 கோடி, மதுரை ரூ.45.26 கோடி, கோவை ரூ.39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்தாண்டின் சாதனையை இந்த தீபாவளி முறியடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
Leave your comments here...