தீபாவளி பண்டிகை : பொது விடுமுறை – நியூயார்க் மேயர் அறிவிப்பு
அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வசிப்பதை அடுத்து ஹிந்துக்களின் பண்டிகைகளும் அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக நியூயார்க்கில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று 2023ம் ஆண்டு பள்ளிகளுக்கான பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எரிக் ஆடம்ஸ் கூறுகையில், ‛தீபாவளி மற்றும் தீபத் திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக்கெண்டேன். இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் தீபாவளி தீப திருவிழாவை அறிவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக’ தெரிவித்தார்.
இதையடுத்து இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்லால் நியூயார்க் மேயருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
அவர் கூறுகையில், ‛தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது, இந்திய-அமெரிக்க சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதன்மூலம், அனைத்து தரப்பு மக்களும் இந்திய நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்கவும், கொண்டாடவும் முடியும்’ என்றார்.
Leave your comments here...