கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு..!
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 4 பிரசித்தி பெற்ற ஆலையங்கள் சார்தாம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதில் ஒன்று தான் கேதார்நாத் ஆலையம். ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி இங்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் உத்தராகண்டுக்கு இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இதற்காக டேராடூனுக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் அஜெய் பாட் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் சென்றார்.
வெள்ளை நிறத்தில் பழங்குடிமக்கள் கையால் நெய்த பாரம்பரிய உடையை பிரதமர் மோடி அணிந்திருந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி கேதார்நாத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டார் . மேலும் புரோகிதர் மந்திரம் கூற தொடர்ந்து பிரதமர் மோடி சிவனை வழிப்பட்டார். சிறப்பு பூஜையும் நடத்தினார். சங்கராச்சாரியார் சிலையை வணங்கினார். மேலும் இங்குள்ள கோயில்களை புனரமைக்க 3 ஆயிரத்து 400 கோடியிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார்.
Leave your comments here...