விஜிலென்ஸ் பிடியில் இருந்து தப்ப நகராட்சிகளில் கோல்டு காயின் திபாவளி இனாம்..!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அரசு அலுவலகங்களில் குறிப்பாக பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை, வணிகவரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, மெட்ரோ வாட்டர் இப்படி பட்ட வருமானம் கொழிக்கும் துறைகளில், உயர் பதவியில் உள்ளவர்களை குஷி படுத்த தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு, உலர்ந்த பழ வகைகள், வெடிகள், வெள்ளி பொருட்கள் அல்லது கோல்டு காயின், பிஸ்கட் போன்றவற்றை பதவிகளின் கிரேடை பொறுத்து வாங்கி இனாமாக கொடுத்து குஷிப்படுத்துவது வழக்கம்.
இது அடாவடி செயல் என்றாலும் போலியாக எஸ்ட்டி மேட் போட்டு நிதியை கொள்ளை அடிப்பதிலும், லஞ்சத்தை இது போன்ற பண்டிகை காலங்களில் பரிசுப் பொருளாக பெற்றுக் கொள்வது மட்டும் நிற்க வில்லை. ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை உஷாராகி மேற்கண்ட துறைகளின் அலுவலகங்களில் ரெய்டு செய்து சுமார் 1.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்து இந்த மாதிரியான இனாம்களை கைப்பற்றி, முறை கேடாக வைத்துள்ள பணத்தையும் கைப்பற்றி வழக்குகள் பதிவு செய்து வரும் நிலையில் இந்த ஆண்டு புதிய டெக்னிக் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்தாண்டு பல்லாவரம் நகராட்சியில் திபாவளி இனாம் கொடுக்க சில அதிகாரிகள் தங்களது அறைகளிலும், ஜீப்புகளிலும், இனாம் கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த கோல்டு காயின்ஸ், கரண்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். அது போல் இந்தாண்டும் தமிழகம் முழுவதும் அரசு அலுவகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு செய்து கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதனால் அதிர்ந்து போன மேற்கண்ட துறை அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் ரகசியமாகக கோல்டு காயின், உலர்ந்த பழங்களையும் வாங்கி தாங்கள் செய்யும் ஊழலுக்கு நேர்த்திக் கடனாக தீபாவளி இனாம் பெற்று வருகின்றனர்.
தங்களுடைய அலுவலகங்களில் கொடுத்தால், தான் செல்லும் அரசாங்க வண்டியை பார்த்து நோட்டம் விட்டு கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக தங்களது சொந்த வாகனத்திலே௱ அல்லது வாடகை வாகனத்திலே௱ வந்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்கி விடாமல் சம்மந்த பட்டவர்களின் வீடுகளில் சென்று கொடுக்கிறார்கள். குறிப்பாக உள்ளாட்சி அமைப்பான நகராட்சி மண்டல பொறியாளர்கள், கடந்த அதிமுக ஆட்சியில் எப்படி பட்டியல்கள் போட்டு நகராட்சி ரீதியாக வாங்கி குவித்தார்களோ அதே போல் ஒவ்வொரு மண்டல ரீஜினல் பொறியாளர்களும் இவ்வளவு வேண்டும் என்று பட்டியலிட்டு கொடுத்துள்ளார்களாம்.
அது சரி இத்தகைய கோல்மால்கள் கடந்த அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றன என்று பார்த்தால் தற்போது திமுக ஆட்சியிலும் இது தொடர்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதாவது சி.எம்.எ. அலுவலகத்திலோ, நகராட்சி அரசு செயலகத்திலோ இது போன்று யாரும் வாங்குவது கிடையாதாம். ஆனால் இந்த அதிகாரிகள் இத்தனை இனாம்கள் யாருக்காக வாங்குகிறார்கள் என்பது தான் புதிராக உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புதுறை யோசிக்க வேண்டியாதாகும், திருப்பூர், நெல்லை, சேலம், வேலூர், தஞ்சை ஆகிய மண்டலங்களில் ரீஜினல் பொறியாளர்கள் நகராட்சிகளில் தீபாவளி இனம் பர்ச்சஸே முடிந்து விட்டதாம். திருப்பூர் மண்டலத்தில் ரீஜினல் பொறியாளரின் வீடான உடுமலையில் ஏற்கனவே கறாராக கமிஷன் வாங்கி கொடுக்கும் மூன்றெழுத்து கொண்ட 1 + 1 பொறியாளர் ஒருவர் மூலமாக தான் இனாம்களை கொள்முதல் செய்தார்களாம். கோவை, சேலம், வேலூர், திருவள்ளூர், கடலூர், நாமக்கல் , ஈரோடு ஆகிய. மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி ஏ.டிக்கள், ஏ.இ.இ க்கள் இவர்கள் கோவைக்கு கடந்த ஆட்சியில் கப்பம் கட்டியவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதே பாணியில் தான் தற்போதும் விஜிலென்ஸ்-க்கு. தெரியாமல் சில முக்கிய நபர்களுக்கு பட்டுவாடா செய்ய சென்னைக்கு நம்பிக்கையான நபர்கள் மூலமாக பட்டுவாடா செய்ய முகாமிட்டுள்ளார்களாம். இவர்கள். என்றைக்காவது ஒரு ஏழைக்கு சிங்கிள் டீ வாங்கி கொடுத்திருப்பார்களா.? வாழ்க வசூல் மேளா..!
லஞ்சம் கேட்கிறார்களா..?
📞டையல் செய்யுங்கள்
📲044 22310989
📲044 22342142
வாட்சப் -9498180936
Leave your comments here...