தெலுங்கானா என்கவுண்டர்: கார்த்தி சிதம்பரம், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரை கழுவி ஊற்றும் நெட்டிசன்..!
தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெறித்து கொலை செய்து, பின் எரித்து கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்திற்கு இன்று காலை நேரில் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள், போலீசாரை தாக்கிவிட்டுதப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, போலீசார், அவர்களை அதே இடத்தில் வைத்து என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பொது மக்களும், பெண்களும் தெலுங்கானா போலீசாருக்கு ரோஜா இதழ்களை தூவி வாழ்த்து தெரிவித்ததுடன், அவரை வாழ்த்தி முழக்கமிட்டுள்ளனர்.
Rape is an heinous crime. It must be dealt with strictly under the provisions of law. While I hold no brief for the alleged perpetrators of this dastardly act, “encounter” killings are a blot to our system. While I understand the urge for instant justice, this is not the way. https://t.co/BzVkLlSgYW
— Karti P Chidambaram (@KartiPC) December 6, 2019
இந்நிலையில் இது பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம், பலாத்காரம் ஒரு கொடூரமான குற்றம். அது சட்டத்தின் படி கடுமையாக தடுக்கப்பட வேண்டும். இதில் குற்றவாளிகளின் மோசமான செயல் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் என்கவுன்டரில் கொல்வது என்பது நமது அரசியலமைப்பிற்கு ஒரு கறை. உடனடி நீதி என்பதை புரிந்து கொள்ள முடிந்தாலும், இது சரியான வழி அல்ல என தெரிவித்துள்ளார்.
இதேபோல் திமுக எம்.பி யான கனிமொழி அளித்த பேட்டியில்:- எல்லாருக்கும் நியாயமான முடிவு என்றே தோன்றும். இதை மறுப்பதற்கில்லை. அதே சமயம்,நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது. நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டனை கிடைத்திருந்தால் சரியானது. தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயம் தரும். என்கவுன்டர் தான் இதற்கு தீர்வா எனவும் கேள்வி எழுகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு
எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகாது – #கனிமொழி#கனிமொழிய ஒரு#பெண்ணா யாரும்
துளியும் நினைக்க
வேண்டாம் அதற்கு
ஆதாரம்👇👇👇#திமுகவேசிஊடகங்கள் pic.twitter.com/A5P1685h3h— 🇮🇳 லட்சுமி தீபா🚩#IsupportCAA2019 (@Deppaa2) December 6, 2019
"இது உண்மையான என்கவுன்ட்டர்தானா என்று விசாரிக்க வேண்டும்": ப.சிதம்பரம் கருத்து#PChidambaram
"நம்பிக்கையில்லாம பேசக் கூடாது,இந்த்ராணியை செஞ்சதுக்கு என்கவுண்டர் பண்ண மாட்டாங்க!' pic.twitter.com/2Xej0SKcl9
— PARANTHAMAN.SRIDARAN 🇮🇳 (@sparjaga) December 6, 2019
கனிமொழி மற்றும் கார்த்தியின் இந்த கருத்திற்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் பலாத்கார வழக்கு குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததற்கு எதிராக ஒரு பெண் எம்.பி.,யே கருத்து தெரிவித்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave your comments here...