கால்நடை மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே 4 பேரும் என்கவுண்டர்: பொதுமக்கள் பாராட்டு..!
ஐதராபாத்தில் கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் இரவு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பழுதடைந்துள்ளது. அப்போது அங்கு வந்த 4 பேர் பைக்கை சரிசெய்வதாக கூறி நடித்து அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரை எரித்து கொலை செய்தனர்.
இதையடுதது வழக்குப்பதிவு செய்த சாய் நகர் போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள், பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து நடித்து காட்ட சொல்லி உள்ளனர்.
இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையான ‘44 நெடுஞ்சாலை; அருகே 4 பேரையும் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொலை செய்தனர் ? என போலீஸார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.
அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீஸாரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்பிற்காக 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக போலீஸார் தரப்பில். இது குறித்து கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை பேட்டி அளித்தார்“எனது மகள் இறந்த 10 நாட்களுக்குள் குற்றவாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்ற அரசுக்கும் போலீசாருக்கும் நன்றி! என கூறியுள்ளார்
Leave your comments here...