முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..!

தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூட உள்ளது.

இந்நிலையில் வரும் 26ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசிக்கபட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், புதிய தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களையும் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே ஆகஸ்ட் மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இம்முறை அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வரும் 26-ம் தேதி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளதால் மேற்கண்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...