ஊழல் வழக்கில் சீன முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை..!
சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜெங்குவாக்கு அந்தநாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பு ஜெங்குவா பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரியாகவும், பொது பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். சில நாட்கள் முன்பு வரை சட்ட அமைச்சராக அவர் பணியாற்றி வந்தார்.
சீனாவின் முக்கிய புள்ளியாக வளம் வந்த இவர் கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 59 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வாங்கினார் என்பது புகாராகும். இந்த வழக்கை ஜிலின் மாகாணத்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது தனது குற்றத்தை பு ஜெங்குவா ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். என்றாலும் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் 2 ஆண்டுகள் சிறையில் வைக்கப்படுவார். சிறையில் நன்னடத்தை சான்று கிடைத்தால் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்
Leave your comments here...