NIA சோதனை – பிஎப்ஐ சார்பில் முழு அடைப்பு போராட்டம் : பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ், கார் கண்ணாடி உடைப்பு – ஐகோர்ட் கண்டனம்..!
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
தமிழ்நாடு, கேரளா உள்பட 15 மாநிலங்களில் 93 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் ஆயுதங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், சோதனையின் முடிவில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Kochi, Kerala | Police detain five PFI workers for allegedly vandalising shops and vehicles during a protest as a part of the statewide strike called over NIA raids pic.twitter.com/X0LDhDaA6h
— ANI (@ANI) September 23, 2022
இதனிடையே, என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என பிஎப்ஐ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Kerala | PFI workers hold protest in Thiruvananthapuram (pics 1 & 2) and Kochi (pic 3 & 4) amid strike called over raids, arrests by NIA pic.twitter.com/SR4vY8OLHY
— ANI (@ANI) September 23, 2022
இந்நிலையில், பிஎப்ஐ சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயங்கின. அதேவேளை, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ சார்பில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த முழு அடைப்பு போராட்டத்தில் இதுவரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
Kochi, Kerala | A KSRTC bus was vandalised allegedly by people supporting the one-day bandh called by PFI today, in Companypadi near Aluva pic.twitter.com/XZqhiAxTDL
— ANI (@ANI) September 23, 2022
குறிப்பாக, திருவனந்தபுரம், கொல்லம், பத்தம்திட்டா, ஆலப்புலா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. கன்னூர் மாவட்டம் நாராணயன்பரா பகுதியில் செய்தித்தாள் கொண்டு சென்ற பைக் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆலப்புலா, கோழிக்கோடு, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் அரசு பஸ்கள், லாரி, ஆட்டோ, கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சாலையில் சென்ற வாகனங்கள் போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிஎப்ஐ அமைப்பு சார்பில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு இன்று தாமாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டது.
அப்போது, முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு ஐகோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய அனுமதியின்றி யாரும் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என தெரிவித்த கோர்ட்டு அனைத்து வகையான வன்முறையும் தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது. பிஎப்ஐ போராட்டத்திற்கு பின் கைது நடவடிக்கை என்பது சரியல்ல என தெரிவித்த கோர்ட்டு முழு அடைப்புக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Leave your comments here...