ரஷ்யாவிடம் இந்தியா வாங்கிய கச்சா எண்ணெய் : அரசுக்கு ரூ.35,000 கோடி லாபம்..!
ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ததன் மூலமாக இந்தியா ரூ.35,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது.
இதன் காரணமாக ரஷ்யா அதிகப்படியான நிதி தேவையில் உள்ளது. ஆனால் உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு குறிப்பிட்ட சில எண்ணிக்கையிலான நாடுகள் மட்டுமே உள்ளன. இதில் இந்திய முக்கிய பங்கை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிதி தேவை எதிரொலியால் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது.
அந்நாட்டிடம் இருந்து உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருப்பதால் அதிபர் புடினின் இந்த நடவடிக்கை இருநாடுகளுக்கும் இடையே லாபகரமானதாக மாறியது. உக்ரைன் மீதான போருக்கு பின் இந்தியா-ரஷ்யா இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகமானது எப்போதும் இல்லாத வகையில் 150 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதில் கச்சா எண்ணெய் முக்கிய இடம் பிடித்துள்ளதால் தள்ளுபடி காரணமாக இந்த வர்த்தகத்தில் மட்டும் இந்தியாவிற்கு சுமார் ரூ.35000 கோடி லாபம் கிடைத்துள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தனது நட்புறவு, நிதி நிலையை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்து வருகின்றது.
Leave your comments here...