பல மொழிகளில் வெளியான லைகர் திரைப்படம் தோல்வி – நஷ்ட ஈடு கொடுக்கும் விஜய் தேவரகொண்டா
இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். குத்துச்சண்டை வீரரான தனது அப்பா தவற விட்ட சாம்பியன் பட்டத்தை பெற முயற்சிக்கும் மகனின் போராட்டம் தான் லைகர். விஜய் தேவரகொண்டாவுடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
உலகமெங்கும் ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் வெளியான லைகர் திரைப்படம் முதல் நாளே மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. முதல் நாள் 33.12 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தை தயாரித்த தர்மா புரொடக்ஷன் அதிகார பூர்வமாக அறிவித்தது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை குறைந்து தற்போது வரை 55 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். லைகர் திரைப்படத்தால் தன்னுடைய 60 சதவீதம் பணத்தை இழந்துள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர் வராங்கல் ஸ்ரீனு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தின் ஒரு பகுதியை சார்மி கபூர் மற்றும் பிற இணைய தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே போல் லைகர் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க போவதாக இயக்குநர் பூரி ஜெகந்நாத் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave your comments here...