லடாக்கில் நாட்டின் முதல் ‘இரவு வான் சரணாலம்’ அமைகிறது : மத்திய அரசு..!

இந்தியா

லடாக்கில் நாட்டின் முதல் ‘இரவு வான் சரணாலம்’ அமைகிறது : மத்திய அரசு..!

லடாக்கில் நாட்டின் முதல் ‘இரவு வான் சரணாலம்’  அமைகிறது : மத்திய அரசு..!

லடாக் யூனியன் பிரதேசத்தில் இந்தியாவின் முதல் “இரவு வான் சரணாலயம்” அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஒரு தனித்துவமான மற்றும் முதல்-வகையான முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த மூன்று மாதத்திற்குள் இந்த சரணாலயம் கட்டிமுடிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

இந்த புதிய இரவு வான் சரணாலயம், சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள ஹான்லேயில் அமைக்கப்படுகிறது. இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்கும். மேலும் இது ஆப்டிகல், இன்ஃப்ரா-ரெட் மற்றும் காமா-ரே தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும். இந்த புதிய இரவு வான சரணாலயத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

டெல்லியில் நேற்று லடாக் பிரதேசத் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் தம்மை சந்தித்தபின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதைத் தெரிவித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இரவு வான் சரணாலயம் தொடங்குவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக், தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் இந்திய வானியற்பியல் நிறுவனம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

இரவு வான் சரணாலயம் தொடங்குவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக், தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் இந்திய வானியற்பியல் நிறுவனம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தலையீடுகள் மூலம் உள்ளூர் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்தத் தளம் உதவும் என்றும் அவர் கூறினார்.

Leave your comments here...